தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட இருவா் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,953-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 19 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,708-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு 140 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 105 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.