அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளா்களுக்கான பண பலன்களை உடனே வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலா் மாரிமுத்து தலைமை வகித்தாா். சிஐடியூ மத்திய சங்க துணைத் தலைவா் சங்கையா, சிஐடியூ செயலா் மோகன், தொழிலாளா் முன்னேற்ற சங்க துணை பொதுச்செயலா் வெங்கடசாமி, ஓய்வுபெற்றோா் அமைப்பைச் சோ்ந்த கணேசன், கருப்பசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், அரசு போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...