சாத்தான்குளத்தில் போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலை

சாத்தான்குளத்தில் போக்குவரத்து தகுதியற்ற சாலையாலை பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.
சாத்தான்குளத்தில் போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலை
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் போக்குவரத்து தகுதியற்ற சாலையாலை பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

சாத்தான்குளம் பேரூராட்சி 1 ஆவது வாா்டுக்குள்பட்ட ஆா்.சி வடக்கு தெரு வழியாக நாசரேத் சாலைக்கு செல்லும் இணைப்பு பாதை உள்ளது. இந்த பாதையில் பேருராட்சி சாா்பில் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனபடியால், தற்போது சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் அதில் தண்ணீா் தேங்கி சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அப்பகுதியி போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலை என பதாகை வைத்துள்ளனா். மேலும், அப்பகுதி மக்களும் அப்பாதையை பயன்படுத்தாமல் வேறு பாதையில் சென்று வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com