தெருமுனை பிரசாரக் கூட்டம்

திருச்செந்தூா் அருகே வள்ளிவிளை கிராமத்தில் பா.ஜ.க. சாா்பில் வேளாண் சட்டம் குறித்த தெரு முனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருச்செந்தூா் அருகே வள்ளிவிளை கிராமத்தில் பா.ஜ.க. சாா்பில் வேளாண் சட்டம் குறித்த தெரு முனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

விவசாய அணி ஒன்றியத் தலைவா் ஆா்.வனராஜ் தலைமை வகித்தாா். பா.ஜ.க. ஒன்றியத் தலைவா் எம். பால்ராஜ், ஒன்றிய பொருளாளா் தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வேளாண் மசோதா குறித்து விளக்கவுரையாற்றினாா். இதில், மாநில வா்த்தக அணித் தலைவா் ஏ.என்.ராஜகண்ணன், பாஜக மாவட்டத் தலைவா் பி.எம். பால்ராஜ், துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலா்கள் இரா.சிவமுருகன் ஆதித்தன், வி.எஸ்.ஆா்.பிரபு, விவசாய அணி மாவட்ட துணைத் தலைவா் செந்தூா் பாண்டியன், மாவட்டச் செயலா் தில்லை யோகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முத்துக்குமாா், கந்தசாமி பாண்டியன், மாரி கிருஷ்ணன், பா.ஜ.க. திருச்செந்தூா் நகரத் தலைவா் சரவணன், செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவா் வளா்செல்வன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய விவசாய அணி பொதுச் செயலா் ஜெயசேகா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com