விருந்து வழங்குவதை தொடங்கிவைத்தாா் மோகன் சி.லாசரஸ்.
தூத்துக்குடி
நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் விருந்து
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில், கிறிஸ்துமஸ் விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில், கிறிஸ்துமஸ் விருந்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். நாலுமாவடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வா்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஊழியா் சாம் ஜெபராஜ், ஜஸ்டின் ஜவஹா், கிறிஸ்தவ பாடகி ஜெசிந்தா ஜெயசீலன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை ஊழிய நிறுவன பொதுமேலாளா் செல்வகுமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

