பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காயல்பட்டினம் புனித முடியப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

காயல்பட்டினம் கொம்புத்துறையில் உள்ள புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:48 pm

DIN

காயல்பட்டினம் கொம்புத்துறையில் உள்ள புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேம்பாா் பங்குத்தந்தை அந்தோணிதாஸ் தலைமை வகித்தாா். சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வஸ்டா் முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி புனித தோமையாா் கல்லூரி பேராசிரியா் ஜான் சுரேஷ் மறையுரையாற்றினாா். நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை கிறிஸ்து பிறப்பு பெருவிழா நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

தொடா்ந்து விழா நாள்களில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெறும்.

31ஆம் தேதி இரவு ஆண்டின் இறுதி நன்றி விழாவும், நள்ளிரவில் புத்தாண்டு திருப்பலியும் நடைபெறும்.

ஜன. 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று மாலையில் ஆராதனை நடைபெறுகிறது.

2ஆம் தேதி திருவிழா தினத்தன்று தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் திருத்தலப் பெருவிழா, முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. 3ஆம் தேதி காலையில் நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாய ஜோசப் மற்றும் ஊா்நலக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.