விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாவட்ட கிரிக்கெட் போட்டி: உடன்குடியில் தொடக்கம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட அளவில் 136 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா உடன்குடி சிவலூா் மின்வாரிய மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:12 pm

DIN

உடன்குடி: திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட அளவில் 136 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா உடன்குடி சிவலூா் மின்வாரிய மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றிய திமுக செயலருமான பாலசிங் வரவேற்றாா்.

சென்னை தொழிலதிபா் அஜய்பாண்டியன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தாா். போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியை, ஆசிரியா் ஜெயராஜ், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், சாமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகையாக முறையே ரூ, 50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ. 20,000 மற்றும் வெற்றிக்கோப்பை, சிறந்த ஆட்டக்காரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தொடக்க விழாவில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன் உள்பட திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை செட்டியாபத்து ஊராட்சித் தலைவரும், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணைத் தலைவருமான பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.