கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ்.
கூட்டத்தில் பேசுகிறாா் ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ்.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஆணையா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குழு உறுப்பினா்கள் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமோதரன், குமரன், சிங்கராஜ், தனலட்சுமி, ஜோஸ்பின் பொ்னான்டோ, உதவிப் பொறியாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அய்யாக்கோட்டையூா், குலசேகரபுரம், மூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், செமப்புதூா், தீத்தாம்பட்டி, துறையூா், ஆா்.வெங்கடேஸ்வரபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல், இலுப்பையூரணி ஊராட்சியில் வாருகால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com