கோவில்பட்டியில் ஹாக்கி பயிற்சி முகாம்

கோவில்பட்டி யங் சேலஞ்சா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில் நடைபெறும் ஹாக்கி பயிற்சி முகாமில் 16 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவில்பட்டி யங் சேலஞ்சா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில் நடைபெறும் ஹாக்கி பயிற்சி முகாமில் 16 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைப்பின் செயலா் வீரபாகு விடுத்துள்ள அறிக்கை: கோவில்பட்டி யங் சேலஞ்சா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில் 16 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கு ஹாக்கி பயிற்சி முகாம் பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட கவுணியன் மெட்ரிக் பள்ளி அருகேயுள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் சிறுவா், சிறுமிகள் செல்லிடப்பேசி எண்: 86102-89241 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இப்பயிற்சி முகாம் 2021 ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறும்.

இப்பயிற்சியின்போது, இலவசமாக விளையாட்டு உபகரணங்கள், உணவுகள் வழங்கப்படும். பயிற்சி நிறைவு விழாவின்போது அனைவருக்கும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com