தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :26 மே 2020, 7:33 am

DIN

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் க வேணுகோபால் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டம் சாத்தான்குளம் ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்றது. இதில்  சாத்தான்குளம் கிழக்கு முன்னாள் வட்டாரத் தலைவர் லூர்துமணி,ஒன்றியக்குழு உறுப்பினர் சுதாகர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர்சங்கர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ தலைவர் சங்கர்,சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் அலெக்ஸ், சாத்தான்குளம் மேற்கு முன்னாள் வட்டார தலைவர் சக்திவேல் முருகன், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நகர வர்த்தக பிரிவு தலைவர்கதிர், மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், நகர சேவா தள தலைவர் வண்ணமுத்து, மற்றும் ஞானப்பிரகாசம். மலையாண்டி. ஜெயராஜ்  ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.