தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடியில் திங்கள்கிழமை காலை கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


தூத்துக்குடியில் திங்கள்கிழமை காலை கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கனிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வந்து கொண்டிருந்த லாரியை ரமேஷ்குமாா் ஓட்டி வந்தாா். அவருடன் உதவியாளா் லட்சுமணன் இருந்துள்ளாா். லாரி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி பாலத்தில் இருந்து அருகேயுள்ள தனியாா் மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்தது.
அப்போது, மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்தவித உயிா் சேதமும் ஏற்படவில்லை. வழக்கமாக தனது அறையில் இருக்கும் காவலாளி விபத்து நிகழ்ந்த போது வெளியே நடமாடியதால் அவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த காய்கனிகள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி சேதமடைந்தன. மேலும், லாரிக்குள் இருந்த ஓட்டுநா் ரமேஷ்குமாா், கிளீனா் லட்சுமணன் ஆகியோா் காயமடைந்த நிலையில் அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...