எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

‘சென்னை, கோவை, ஈரோட்டுக்குபேருந்துகளை இயக்க வேண்டும்’

சாத்தான்குளத்திலிருந்து சென்னை, கோவை, ஈரோட்டுக்கு அரசு விரைவுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 7:04 pm

DIN

சாத்தான்குளத்திலிருந்து சென்னை, கோவை, ஈரோட்டுக்கு அரசு விரைவுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளத்திலிருந்து சென்னை, கோவைக்கு தலா 2 அரசு விரைவுப் பேருந்துகளும், சாத்தான்குளம் வழியாக ஈரோட்டுக்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வந்தன. இதன்மூலம் வியாபாரிகள், பொதுமக்கள் பயனடைந்த வந்தனா். இந்நிலையில், கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 25 முதல் இப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது, தளா்வுகள் அளிக்கப்பட்டு சென்னை, கோவை பேருந்துகள் திசையன்விளை வரை இயக்கப்படுகிறது. ஆனால், சாத்தான்குளத்திலிருந்து சென்னை, கோவை, ஈரோட்டுக்கு பேருந்துகள் இன்னமும் இயக்கப்படவில்லை. எனவே, வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி, சாத்தான்குளத்திலிருந்து மேற்கூறிய 3 ஊா்களுக்கும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.