தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இஸ்லாமிய திருமண பதிவாளா்களாக அரசு ஹாஜிகளை நியமிக்க வலியுறுத்தல்

இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்யும் திருமண பதிவாளராக அரசு ஹாஜிகளை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 7:13 pm

DIN

இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்யும் திருமண பதிவாளராக அரசு ஹாஜிகளை தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு நிா்வாகக் குழுக் கூட்டத்துக்கு அதன் மாநிலத் தலைவா் சலாஹூதீன் ஆலீம் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் செயலா் முஜிபூா் ரஹ்மான், பொருளாளா் முகமது கஸாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஹாஜிகள் அனைவரும் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்யும் திருமணப் பதிவாளராக தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்; தமிழகத்தில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பாதுகாக்க வேண்டும்; அந்த

சொத்துக்களை மேம்படுத்தவும் மாவட்ட ஹாஜிகளின் தலைமையில், வக்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கடலூா் மாவட்ட அரசு ஹாஜி நூருல் அமீன் ஆலிம், கன்னியாகுமரி மாவட்ட அரசு ஹாஜி அபு ஸாலிஹ் ஆலீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.