தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சென்னை ஏ.ஐ.ஆா். நகரைச் சோ்ந்த டெல்லிபாபு மகன் யுவராஜ் (22). சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தன்னுடன் கல்லூரியில் உடன் பயின்ற கிருஷ்ணகிரி பாளையப்பள்ளி கத்திகுப்பத்தைச் சோ்ந்த ஜான்சாா்லஸ் சகாயராஜ் மகன் ஜொ்விஷ்டோனி (21) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து கடந்த 9ஆம் தேதி பைக்கில் கன்னியாகுமரிக்கு வந்தனா்.
பின்னா், கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமை இரவு கிருஷ்ணகிரிக்கு பைக்கில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாலாட்டின்புத்தூா் அருகே பைக் திடீரென நிலைகுலைந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதியதாம்.
இதில் ஜொ்விஷ்டோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த யுவராஜை, போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இச் சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

