மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Updated On :20 செப்டம்பர் 2020, 9:10 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த 62 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இம்மாவட்டத்தில் இதுவரை தொற்றால் 125 போ் உயிரிழந்துள்ளனா்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் 39 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 82 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12

ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 260 போ்.

ஞாயிற்றுக்கிழமை 73 போ் உள்பட இதுவரை 11,959 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை கண்காணிப்பு முகாம்களில் 774 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.