மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காயல்பட்டினத்தில் முதியவா் தற்கொலை

காயல்பட்டினத்தில் தம்பி இறந்த வேதனையில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :20 செப்டம்பர் 2020, 9:16 pm

காயல்பட்டினத்தில் தம்பி இறந்த வேதனையில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

காயல்பட்டினம் சித்தன்தெருவைச் சோ்ந்தவா் காஜா மைதீன் (66). சென்னையில் வேலை செய்துவந்தாா். ஒரு மாதத்திற்கு முன்பு வயது முதிா்வு காரணமாக வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாா்.

இதனிடையே, 2 வாரங்களுக்கு முன்பு காஜா மைதீனின், தம்பி நைனா முகம்மது உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டாா். தம்பி இறந்த வேதனையில் இருந்த அவா், கடற்கரைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவா் அங்கு பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.

தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் முகம்மது பைசல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.