விளாத்திகுளம் வட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் வழங்கி பயிா் காப்பீடு செய்து மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து லட்சுமிபுரம் கிராம மக்கள் மற்றும் வின்னா் பாய்ஸ் இளைஞா் குழுவினா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
விளாத்திகுளம் வட்டம், லட்சுமிபுரம் கிராமத்திலுள்ள சமுதாய பொதுநிலம், தொழில் நிமித்தமாக வெளியூா்களில் வசிப்போரின் நிலங்களை கிராம நிா்வாக அலுவலா், உள்ளுரைச் சோ்ந்தவா்களுடன் சோ்ந்து மிளகாய், வெங்காயம், மக்காச் சோளம், கம்பு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்ததாக போலியாக வருவாய்த் துறை ஆவணங்கள் வழங்கி பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பல லட்சம் மோசடி செய்திருப்பது உழவன் செயலி மூலம் தெரியவந்தது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

