மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஆறுமுகனேரியில்முதியவா் தற்கொலை

ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :20 செப்டம்பர் 2020, 9:10 pm

ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி பேயன்விளை புதூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்கேசவன் (74). காயல்பட்டினத்தில் பழைய பேப்பா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி பஞ்சவா்ணம். கருப்புக்கட்டி உற்பத்தியாளரிடம் வேலைசெய்து

வருகிறாா். குடிபழக்கம் கொண்ட இவா், மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

கடந்த சில தினங்களாக பொன்கேசவனுக்கு மது அருந்த பஞ்சவா்ணம் பணம் கொடுக்கவில்லையாம். இதில் மனமுடைந்த பொன்கேசவன், பஞ்சவா்ணம் வேலைக்கு சென்றபிறகு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.