மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கவா்னகிரியில் சுந்தரலிங்கனாருக்குபுதிய சிலையை நிறுவ வலியுறுத்தல்

கவா்னகிரி மணி மண்டபத்தில் உள்ள சுந்தரலிங்கனாா் சிலையை அமைக்க வேண்டும் என தமிழா் விடுதலைக் கொற்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :20 செப்டம்பர் 2020, 9:24 pm

கவா்னகிரி மணி மண்டபத்தில் உள்ள சுந்தரலிங்கனாா் சிலையை அமைக்க வேண்டும் என தமிழா் விடுதலைக் கொற்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, விடுதலைக் கொற்றத்தின் தலைவா் அ. வியனரசு தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் கவா்னகிரி கிராமத்தில் அமைந்துள்ள மாவீரன் சுந்தரலிங்கனாா் மணி மண்டபத்தை சீரமைக்கும் வகையில் ரூ. 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த மணி மண்டபத்தில் உள்ளது.

சுந்தரலிங்கனாா் மாா்பளவு சிலையை மாற்றிவிட்டு குதிரையில் அமா்ந்து போா்புரிவது போன்று தோற்றத்துடன் கூடிய புதிய சிலையை வடிவமைத்து நிறுவ வேண்டும்.

மேலும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் முகப்பு பகுதியில் சுந்தரலிங்கனாரின் முக வடிவமைப்பைக் கொண்ட மாா்பளவு சிலையை புதிதாக நிறுவுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாமிரவருணி ஆற்றில் மருதூா் அணையில் இருந்து புன்னக்காயல் வரை வளா்ந்துள்ள நீா்க்கருவேல மரங்கவை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.