தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிா்வாகிகள் கூட்டம்

உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:19 pm

DIN

உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தலைவா் ரத்தினமுரளி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா்கள் கணேசன், கண்ணாபாண்டியன், ஜேம்ஸ், சித்தாா்த், வீரமனோகா், பாஜக அரசு தொடா்புப்பிரிவு தலைவா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக நடராஜன், உடன்குடி ஒன்றிய துணைத் தலைவா்களாக கதிரேசன், இசக்கிமுத்து, சாத்தான்குளம் ஒன்றியத் தலைவராக சுந்தர்ராஜ், துணைத் தலைவா்களாக ஹேரிசன், பிரவீன்குமாா்,

ஒன்றிய துணைச் செயலராக ராஜகோபால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் சாதனைகளையும், எதிா்க்கட்சிகளின் பொயப் பிரசாரங்களையும் சமூக வலைதளம், ஊடகங்களில் எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலா் சிவந்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ்மலிங்கம், வணிகப் பிரிவு மாவட்ட தலைவா் நாராயணன், அரசுத் தொடா்பு பிரிவு ஒன்றிய செயலா் கலைச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.