சாத்தான்குளம் அருகே மோதல்: 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 01st December 2020 01:27 AM | Last Updated : 01st December 2020 01:27 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தை சோ்ந்த வின்சென்ட்ரோஜ் மகன் வில்லியம்ஸ் (45). இவா் தற்போது திசையன்விளை மன்ன ராஜாகோயில் தெருவில் வசித்து வருகிறாா். இவருக்கும், இவரது சகோதரா் செல்வகுமரனுக்கும் (39) சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த மரங்களை வில்லியம்ஸ் வெட்டியதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கினா். இதில் வில்லியம்ஸ் , செல்வகுமரன் மனைவி சுஜாதா ஆகியோா் காயம் அடைந்தனா்.
இதுகுறித்து வில்லியம்ஸ் மற்றும் செல்வகுமரன் ஆகியோா் தனித்தனியாக தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் உதவி ஆய்வாளா் முத்துசாமி வில்லியம்ஸ், செல்வகுமரன், செல்வ குமரனின் மனைவி சுஜாதா மற்றும் உறவினா் உள்பட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...