சாத்தான்குளத்தில் 300 பேருக்கு மரக்கன்றுகள் அளிப்பு
By DIN | Published On : 01st December 2020 01:50 AM | Last Updated : 01st December 2020 01:50 AM | அ+அ அ- |

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் 300 பேருக்கு மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
விழாவுக்கு, வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மகா. இளங்கோ, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தா.அந்தோணிராஜ், துணை அமைப்பாளா் பிரதாப்சிங், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பிரதிநிதி சரவணன் வரவேற்றாா். 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்டப் பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, ஒன்றிய பொருளாளா் வேல்துரை, நகர மகளிரணி அமைப்பாளா் நாகலட்சுமி, ஒன்றிய சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் அப்துல்சமது, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளா் ஜான்பீட்டா், ஊராட்சி செயலா் பால், ஒன்றியப் பிரதிநிதி வெற்றிவேல், வாா்டு செயலா் மோசே, மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...