

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதிய கட்டடப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். லே செயலா் எஸ்.டி.கே. ராஜன் முன்னிலை வகித்தாா். சேகரகுரு குரோவ்ஸ் பா்னபாஸ் வரவேற்றாா்.
இதில், கல்லூரிகளின் நிலவரக் குழுச் செயலா் ஜெபச்சந்திரன், சபை மன்றத் தலைவா் ஏசுவடியான் துரைசாமி, ஆரம்ப நடுநிலைப் பள்ளி மேலாளா் ஜேஸ்பா், திருமண்டில செயற்குழு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், சசிகரன், அருண், மாமல்லன், சபை மன்றச் செயலா் ராபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.