ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 15th December 2020 01:56 AM | Last Updated : 15th December 2020 01:56 AM | அ+அ அ- |

sat14kavadi_1412chn_38_6
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை 5ஆவது சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
பூஜையையொட்டி ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் புனித நீா் எடுத்து வரப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் அலங்கார தீபாராதனையும் தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.