பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கோரி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 16th June 2020 01:47 PM | Last Updated : 16th June 2020 01:47 PM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசு கரோனா நிதியாக மாதம் 7,500 வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தலைமையில் சிதம்பரம் நகர் கனரா வங்கி அருகில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய, மாநில அரசு கொரோனா நிதியாக மாதம் 7,500 வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ராஜா, நகர குழு உறுப்பினர் ஆறுமுகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு பையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...