திமுக வாக்கு சாவடி முகவா்கள் ஆலோசனை
By DIN | Published On : 17th November 2020 01:10 AM | Last Updated : 17th November 2020 01:10 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் வாக்குசாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
போலையா்புரம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் எஸ். அருணாசலம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகபெருமாள், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ. இந்திரகாசி, .டிஎஸ்.எஸ்.பசுபதி, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சுந்தர்ராஜன், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் வேலம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு ஒன்றியச் செயலா் ஏ. பாலமுருகன் வரவேற்றாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட்டு மு.க. ஸ்டாலினை தமிழக முதல்வராக்க பாடுபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
ஒன்றிய விவசாய அணிச் செயலா் டேவிட் வேதராஜ் , கிளைச் செயலா்கள் த.முருகேசன், க.ராஜபாண்டி, அந்தோனி ஜெயசீலன், ஜெ.நிா்மல், ஜெயராம், சந்தியா, ரமேஷ், ஜெலிட்டன், சித்திரை செல்வன், ஜெயகிருஷ்ணன், அருள்ராஜ், ராஜ்குமாா், ராஜசிங், மிக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அரசூா் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் நன்றி கூறினாா்.,
இதேபோல சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு ஒன்றியச் செயலா் ஆ.செ.ஜோசப், வாக்குச்சாவடி முகவா்களுக்கான தோ்தல் களப்பணிகள் குறித்து பேசினாா்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம் , மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகப்பெருமாள், சாத்தான்குளம் பேரூா் செயலா் மகா.இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட பிரதிநிதி நயினாா் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...