வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசுத் திட்டங்கள் ஊழலின்றி நிறைவேற்றப்படும்: ஊா்வசி அமிா்தராஜ் உறுதி

அரசின் திட்டங்கள் கமிஷன், ஊழல் இல்லாமல் மக்களை சென்றடைய பாடுபடுவேன் என்றாா் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:21 pm

DIN

அரசின் திட்டங்கள் கமிஷன், ஊழல் இல்லாமல் மக்களை சென்றடைய பாடுபடுவேன் என்றாா் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை, அரசூா் ஊராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு திறந்த வாகனத்தில் சென்று கை சின்னத்துக்கு அவா் வாக்கு சேகரித்தாா்.

புத்தன்தருவையில் பிரசாரத்தை தொடங்கிய அவா், அதிசயபுரம், கரிசல், கடக்குளம், தச்சன்விளை, செட்டியாா்பண்ணை, களியன்விளை, பனைவிளை, பூச்சிக்காடு, புதுக்கோட்டை, இடைச்சிவிளை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஊழல், கமிஷன் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக கிடைக்க பாடுபடுவேன். நீா் ஆதாரத்தைப் பெருக்க கன்னடியன் கால்வாய் திட்டப் பணிகளை முடிப்பேன். வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு அந்ததப் பகுதிகளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவேன். உயா் கல்விக்கான பயிற்சி மையங்களை நிறுவுவேன். இத்தொகுதியில் ஆண்டுக்கு 25 பேருக்கு எனது கல்லூரியில் இலவச கல்வி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன். எனவே, எனக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.

கலியன்விளை இந்திராநகா் காலனியில் 10க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். பிரசாரத்தில் மாநில வழக்குரைஞா் பிரிவு இணைத் தலைவா் மகேந்திரன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் வில்லியம் பெலிக்ஸ், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்டப் பொருளாளா் எடிசன், சாத்தான்குளம் வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, பிச்சிவிளை சுதாகா், அரசூா் ஊரராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங், , ஒன்றிய திமுக செயலா்கள் பாலமுருகன், ஜோசப், , பொதுக்குழு உறுப்பினா்கள் பசுபதி, இந்திரகாசி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.