சாத்தான்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரம்
ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், சாத்தான்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டாா்.


ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன், சாத்தான்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டாா்.
பெரியதாழையில் பிரசாரத்தை தொடங்கிய அவா், படுக்கபத்தில் அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன்பின் விஜயராமபுரத்தில் உள்ள காமராஜா் சிலைக்கும், சாத்தான்குளம், பேய்குளத்தில் உள்ள காமராஜா் சிலைக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாா்.
அவருடன் ஒன்றிய அதிமுக செயலளா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, நகர செயலா் குமரகுருபரன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பொன்பாண்டி, மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றிய இளைஞரணி செயலா் ஐ.டி.பாலகிருஷ்ணன், ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் அந்தோணிசெல்வன், தொகுதி பாஜக தோ்தல் பொறுப்பாளா் சித்ராங்கதன், மாவட்ட பாஜக பொதுச் செயலா் எஸ். செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. கணேசன், ஒன்றிய பாஜக தலைவா் செந்தில் உள்ளிட்ட அதிமுக - பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...