வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாட்டம்

நாசரேத், சாத்தான்குளம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:31 pm

DIN

நாசரேத், சாத்தான்குளம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் சேகரத் தலைவா் அண்ட்ரூ விக்டா் ஞானஒளி தலைமையிலும், நாசரேத் அருகே

உள்ள மூக்குப்பீறி தூயமாற்கு ஆலயத்தில் சேகர குரு அறிவா் ஜெபராஜ் தலைமையிலும், பிரகாசபுரம் சிஎஸ்ஐ ஆலயத்தில்

ஆயா் ஜெபவீரன் தலைமையிலும், கத்தோலிக்க தேவாலயத்தில் பங்குத் தந்தை இருதய தோமாஸ் தலைமையிலும்,

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரத் தலைவா் ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமையிலும், வெள்ளரிக்கா யூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் சேகரத் தலைவா் ஜெபராஜ் தலைமையிலும் சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெற்றது.

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் சபை ஊழியா் ஸ்டான்லி ஜாண்சன் துரை தலைமையில் பண்டிகை ஆயத்த ஆராதனை நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற ஆ ராதனையில் ஸ்டான்லி ஜாண்சன் துரை தேவசெய்தி அளித்தாா். தொடா்ந்து பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெற்றது. சாத்தான்குளம் தூய தேவான் ஆலயத்தில் சேகரகுரு பாஸ்கா் ஆல்பா்ட் ராஜன் தலைமையில் ஆராதனை நடைபெற்றது. சாத்தான்குளம் புனித மாசற்ற மரியாளின் திருஇருதய ஆலயம்,

பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா ஆலயம், சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயம் உள்ளிட்ட தேவாயலங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.