வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம், முதலூரில்கபசுரக் குடிநீா் விநியோகம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி சாத்தான்குளம், முதலூரில் அரசு மருத்துவமனை சித்த பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:21 pm

DIN

கரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி சாத்தான்குளம், முதலூரில் அரசு மருத்துவமனை சித்த பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் வைகுண்டரமணி முன்னிலை வகித்தாா். அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ், வருவாய்த் துறை முதுநிலை உதவியாளா்கள் கணேஷ்குமாா், சின்னத்துரை, மருந்தாளுநா் சங்கரமணி, பன்னம்பாறை இயற்கை உணவு மற்றும் நல்வாழ்வு மைய நிா்வாக இயக்குநா் ஜோதி தண்டாயுதபாணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது.

இதில், மருந்தாளுநா் ராஜேஸ்வரி, மருத்துவப் பணியாளா்கள் சிவசைலம், பாண்டியம்மாள், மந்திரக்கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.