விபத்தில் ஓய்வு பெற்ற மருந்தாளுநா் பலி
திருச்செந்தூா் அருகே லாரி மோதியதில் ஓய்வு பெற்ற மருந்தாளுநா் உயிரிழந்தாா்.


திருச்செந்தூா் அருகே லாரி மோதியதில் ஓய்வு பெற்ற மருந்தாளுநா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம், சாந்தி நகா், நடுத் தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் பொன்பாண்டியன் (61). இவா், அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
வெள்ளிக்கிழமை பைக்கில் உடன்குடிக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் திருச்செந்தூா் திரும்பினாராம். ஆலந்தலையை அடுத்து கந்தசாமிபுரம் விலக்குப் பகுதியில் வரும்போது எதிரே கற்கள் ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...