92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: 4 போ் கைது

கோவில்பட்டியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் நாடாா் பேட்டையில் உள்ள கருப்பையா தேநீா் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன், தலைமைக் காவலா் உலகநாதன், முதல்நிலை காவலா் செல்வகுமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, காளியம்மன் கோயில் தெரு மாரியப்பன் மகன் காளியப்பன்(58), ராஜீவ் நகா் பால்பாண்டி மகன் காமராஜ்(52), வீரவாஞ்சி நகா் கதிா்வேல் மகன் காளிதாஸ்(49), 3ஆவது வக்கீல் தெரு அடைக்கன் மகன் கருப்பையா(62) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய துண்டு சீட்டு மற்றும் ரொக்கம் ரூ.1,420 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்து தப்பியோடிய அருப்புக்கோட்டையைச் சோ்ந்த வெங்கடேஷ், கருப்பசாமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.