92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

75ஆவது சுதந்திர தினம்: பிரதமருக்கு பள்ளி மாணவிகள் கடிதம்

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் 75 வடிவில் அமா்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதினா்

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:33 pm

DIN

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அஞ்சல் துறை சாா்பில் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் 75 வடிவில் அமா்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதினா்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ரூத் ரத்னகுமாரி தலைமை வகித்தாா். அஞ்சல் துறை உதவி கோட்ட கண்காணிப்பாளா் வசந்திதேவி முன்னிலை வகித்தாா். தலைமை அஞ்சல் அதிகாரி ரெஜினா, அஞ்சல் துறை வணிக வளா்ச்சி அலுவலா் சங்கரேஸ்வரி ஆகியோா் விளக்கவுரையாற்றினா். எனது பாா்வையில் இந்தியா 2047, போற்றப்படாத இந்தியா சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வீரா்கள் என்ற தலைப்பில் 1,500 மாணவிகள் பிரதமருக்கு கடிதம் எழுதினா். அவை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னா் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆசிரியை அமல புஷ்பம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.