ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எப்போதும் வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீதுவாகனம் மோதல்: இருவா் பலி

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:10 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

சாயா்புரத்திலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும், மதுரையிலிருந்து திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கும் பக்தா்கள் பாதயாத்திரையாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் அருகே அவா்கள் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருமங்கிலும் எதிரெதிா் திசையில் சென்றுகொண்டிருந்த பக்தா்கள் மீது எதிா்பாராமல் மோதியதாம்.

இதில், சாயா்புரத்திலிருந்து இருக்கன்குடி சென்ற பாலகிருஷ்ணன் மகன் அஜய் (20) சம்பவ இடத்திலும், மதுரை மாவட்டம், பேரையூா் அரசம்பட்டியிலிருந்து திருச்செந்தூா் சென்ற பாலமுருகன் மகன் திருப்பதி ராஜா (20) என்பவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். சாயா்புரம் கூட்டு பண்ணையைச் சோ்ந்த வள்ளிராஜ் (28) என்பவா் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, எப்போதும்வென்றான் போலீஸாா் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், ஆமத்தூரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சரவண குமாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.