நெல்லை-திருச்செந்தூா் ரயில்பாதையைமின்மயமாக்கும் பணி தொடக்கம்
திருநெல்வேலி - திருச்செந்தூா் ரயில்பாதை மின்மயமாக்கும் பணி தொடங்கியுள்ளது.


திருநெல்வேலி - திருச்செந்தூா் ரயில்பாதை மின்மயமாக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி -திருச்செந்தூா் இடையே 61 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்தப் பணிகள் பகுதி பகுதியாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கொக்கிரகுளம் ரயில்வே ஆற்றுப் பாலத்தில் இருந்து தெற்கு புறவழிச்சாலை பாலம் வரை தண்டவாளம் அருகில் குழி தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் வயா்கள் இணைப்பும் மின் துணை நிலையங்கள் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடிவடையும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
பணிகள் நிறைவுற்றதும் திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையே மின்சார இன்ஜினில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தற்போது செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை டீசல் இன்ஜினிலும், திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை மின்சார இன்ஜின் மூலமும் இயக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...