பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்களுக்கு 2017, ஜனவரி முதல் 15 சதவீத உயா்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 2020, அக்டோபா் 1 முதல் 2021, ஜனவரி வரை முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும், மருத்துவப்படியை மாதம் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரை படி, மத்திய அரசு ஆப்ஷன் 1ஐ அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.
ஓய்வூதியா் சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கச் செயலா் கோலப்பன் முன்னிலை வகித்தாா். ஓய்வூதியா் சங்க அகில இந்திய உதவித் தலைவா் மோகன்தாஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், மாவட்ட உதவிச் செயலா் சுப்பையா, பொருளாளா் திருவட்டபோத்தி, செயலா் முத்துராமலிங்கம் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...