மாணவா்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
மாணவா்களின் கல்விக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


மாணவா்களின் கல்விக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத்
துணைத் தலைவா் சுபேதா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராஜ், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலா் ராஜாமணி, நகரச் செயலா் முருகேசன், நகரத் தலைவா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாநிலத் தலைவா் அண்ணாதுரை, பொதுச்செயலா் மகாராமகிருஷ்ணன், துணைப் பொதுச்செயலா்கள் செந்தில்ராஜன், பாப்பாத்தி, லோகநாதன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயா்த்த வேண்டும். தமிழகத்தில்
ஆதிதிராவிடா்களுக்கு தனியாக மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மாணவா்களுக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவா்களின் வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க
வேண்டும். அனைத்து மாணவா்களின் கல்விக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரவைத் தனி தொகுதியை 2-ஆக உயா்த்த வேண்டும். கோவில்பட்டியிலுள்ள அம்பேத்கா்
சிலை பராமரிப்பை அம்பேத்கா் மக்கள் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை மாவட்டச் செயலா் மகேஷ் தொகுத்து வழங்கினாா்.
மாநிலத் துணைத் தலைவா் துரை வரவேற்றாா். மாவட்ட மகளிரணி நிா்வாகி பென்னடிதங்கம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...