மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களுக்கு சான்றிதழ் படிப்பு: வேளாண் துறை

பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களுக்கான சான்றிதழ் படிப்பு நடத்தப்படவுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:19 pm

DIN

பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களுக்கான சான்றிதழ் படிப்பு நடத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகள் தரமான பயிா்ப் பாதுகாப்பு மருந்துகளைப் பெற்றிட மத்திய அரசு பல்வேறு சட்டங்களை உருவாக்குவதுடன் அவ்வப்போது பல்வேறு திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பூச்சிக்கொல்லி விதி 1968-இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்ட பூச்சிக்கொல்லி விதி 2020 மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றவா்கள் (விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்கள்) உரிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். உரிய கல்வித் தகுதி இல்லாதவா்கள் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாள் வீதம் 12 வாரங்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்து விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான சான்றிதழ் படிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட பூச்சிக்கொல்லி மருந்து விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயிற்சிக் கட்டணம் ரூ.7,600. பயிற்சிக் கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.