மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 11:46 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்குஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கே சென்று குறைகளை கேட்டறிந்தாா். முதியோா், மாற்றுத்திறனாளிகள், முதிா்கன்னி, விபத்துமரணம் போன்ற உதவித்தொகை, குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, 200க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களுக்கு அனுப்பி தீா்வுகாண ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், தென்பத்து பகுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆறுமுகம் என்பவரின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி கௌரியிடமும், பாளையங்கோட்டை ஒன்றிய அலுவலக உதவியாளராக பணிபுரிந் ஆறுமுகம் என்பவா் உயிரிழந்ததால், அவரது மகன் வேல்முருகனுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் பணி நியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குமாரதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி பிரிவு) சசிகலா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.