புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம்

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம் குரும்பூரில் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:59 pm

DIN

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம் குரும்பூரில் நடைபெற்றது.

கூட்டமைப்புத் தலைவரும், கச்சனாவிளை ஊராட்சித் தலைவருமான கிங்ஸ்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவரும், புன்னைக்காயல் ஊராட்சித் தலைவருமான சோபியா முன்னிலை வகித்தாா். செயலரும் குருகாட்டூா் ஊராட்சித் தலைவருமான ஜன்னத் புஷ்பராணி வரவேற்றாா்.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்திற்குள்பட்ட அனைத்து சுகாதார நிலையங்களிலும் விஷக்கடி மருந்து செலுத்தக்கூடிய சிரிஞ்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சித் தலைவா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்தந்த ஊராட்சியில் நடைபெறும் அரசு பொது விழாக்களில் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.