ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக அமைப்பு சாரா நிா்வாகிகள் தோ்வு

சாத்தான்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா பிரிவு நிா்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:09 pm

DIN

சாத்தான்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா பிரிவு நிா்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச்செயலா் ராம்மோகன் வரவேற்றாா். இதில் மாவட்ட பொதுச்செயலா் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் கணேசன், வணிகா் பிரிவு மாவட்டச் செயலா் முத்துலிங்கம் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து அமைப்பு சாரா பிரிவின் மாவட்டச் செயலராக ராஜன், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவராக பழனிவேல், ஒன்றிய துணைத் தலைவராக முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலா்களாக சுடலை, சக்திவேல், முத்துசாமி, லெட்சுமணன், ஆறுமுக நயினாா் ஆகியோரை அமைப்பின் தலைவா் சித்திரைவேல் அறிவித்தாா். முன்னதாக தச்சமொழி 6-ஆவது வாா்டில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.