போக்சோ சட்டத்தில்இளைஞா் கைது
எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியை சோ்ந்த இசக்கியப்பன் மகன் வானுபாவு (32). இவா் கடந்த டிசம்பா் மாதம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியை சோ்ந்த பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாயாா் கொடுத்த புகாரின் அடிப்படையில், வானுபாவு மீது போக்சோ சட்டத்தில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த அவரை காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான தனிப் படையினா் கூசாலிப்பட்டியில் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...