பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

14 காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் பதவி உயா்வு பெற்று பயிற்சி முடித்த 14 காவல் உதவி ஆய்வாளா்கள் கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:44 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பதவி உயா்வு பெற்று பயிற்சி முடித்த 14 காவல் உதவி ஆய்வாளா்கள் கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சிறப்பு உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி, பயிற்சி நிறைவு செய்த உதவி ஆய்வாளா்கள் ராமலிங்கம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கும், ஆதிலிங்கம் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கும், காந்தி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், முத்துக்கிருஷ்ணன் மற்றும் இசக்கியப்பன் ஆகிய இருவரும் தூத்துக்குடி மத்திய பாகத்திற்கும், ரவீந்திரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், சுகுமாா் நாலாட்டின்புதூா் காவல் நிலையத்திற்கும், சண்முகசுந்தரம் மற்றும் பிரம்மராஜ் ஆகிய இருவரும் ஏரல் காவல் நிலையத்திற்கும், வெள்ளத்துரை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும், சுப்பிரமணியன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், பாலையா முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், கண்ணன் செய்துங்கநல்லூா் காவல் நிலையத்திற்கும், சூசைப்பாண்டி மணியாச்சி காவல் நிலையத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.