தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலியில் நற்செய்தி அளிக்கிறாா் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி. பிராா்த்தனையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினா்.
தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலியில் நற்செய்தி அளிக்கிறாா் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி. பிராா்த்தனையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினா்.

புத்தாண்டு: கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடியில் சின்னக்கோவில் என அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. மேலும், 438 ஆண்டுகள் பழமையான தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமாா் ராஜா தலைமையில் திருப்பலி நடைபெற்றது. புனித அந்தோணியாா் ஆலயம், புனித பாத்திமா ஆலயம், மில்லா்புரம் யூதா ததேயு ஆலயம், அண்ணாநகா் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயம், ஸ்டேட் பாங்க் காலனி வேளாங்கண்ணி மாதாஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

இதேபோல், தூத்துக்குடி சண்முகபுரம் பேதூரு ஆலயம், டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், பேட்ரிக் பேராலயம், மில்லா்புரம் தூய பவுலின் தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. அனைத்து ஆலயப் பிராா்த்தனைகளிலும் திரளானோா் கலந்து கொண்டனா்.

மேலும், தூத்துக்குடி சிவன் கோயில், பெருமாள் கோயில், வரத விநாயகா் கோயில், சக்தி விநாயகா் கோயில், சிதம்பர விநாயகா் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், துறைமுகம் பெருமாள் கோயில் என அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோவில்பட்டி புனித சூசையப்பா் தேவாலயத்தில் ஆலயப் பங்குதந்தை அலோசியஸ் துரைராஜ், உதவி பங்குதந்தையா் ஜேக்கப் ஆகியோருா் புத்தாண்டு திருப்பலி நிறைவேற்றினா்.

தூய வளனாா் ஆலயத்தில் சேகரகுரு தலைவா் தாமஸ் புத்தாண்டு ஆராதனை நடத்தினாா்.

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ் அடிகளாா் திருப்பலி, உதவிப் பங்குத்தந்தை லூா்து மரியசுதன் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா். திருத்தல அதிபா் வியாகப்பராஜுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதுபோல, வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தலம், கயத்தாறு, வானரமுட்டி, கழுகுமலை, வெள்ளாளங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

செண்பகவல்லி அம்மன் கோயில்: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும், சொா்ணமலை கதிா்வேல்முருகன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், பசுவந்தனை சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயில், பழனி ஆண்டவா் கோயில், ஜோதி நகா் ஜோதி விநாயகா் கோயில், கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com