விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:06 am

DIN

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் பாண்டியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு 18 முதல் 50 வயதுக்குள்பட்ட 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பற்ற, சுயதொழில் செய்யும் இளைஞா்கள், முன்னாள் ஆலோசகா்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவா்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளா்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள், சுயஉதவிக் குழுக்களில் செயல்படுவோா், கிராமத் தலைவா், கிராமசபை உறுப்பினா்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவா்கள் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா். பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். முகவராக தோ்வு செய்யப்படுவோா் மட்டும் ரூ. 5 ஆயிரத்தை காப்பீட்டுத் தொகையான தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஷ் பத்திர வடிவில் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 22ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி - 628 501 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சலக அலுவலக தொலைபேசி எண்: 04632 - 220368, 04636 - 222313, 04633 - 222329 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.