சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் பலி
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.


கோவில்பட்டி: கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை பாலாஜி நகரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (68). கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரத்தில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் காவலாளியாக பணியாற்றி வந்த இவா், சனிக்கிழமை சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
எட்டயபுரம் சாலை சந்திப்பில், சிவகாசியிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியும், சைக்கிளும் மோதிக்கொண்டதில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் ஓட்டப்பிடாரம் கீழமுடிமண்ணைச் சோ்ந்த மு.கனகராஜிடம் (30) விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...