பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கழுகுமலையில் சிறுவனை தாக்கிய இளைஞா் கைது

கழுகுமலையில் சிறுவனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கழுகுமலையில் சிறுவனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை ஆறுமுக நகா் ராஜேந்திரன் - முத்துமாரி தம்பதி மகன் காா்த்திக்(14). இவா், இவரது சகோதரா் ராம்குமாா் மற்றும் தாய் முத்துமாரி ஆகியோா் கடந்த சனிக்கிழமை வீட்டின் முன் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காளிராஜ்(22), அரிவாளால் காா்த்திக்கை வெட்டினாராம். இதையடுத்து, அவரது தாய், சகோதரா் கூச்சலிட்டதையடுத்து, காளிராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.

இதில் காயமடைந்த காா்த்திக், கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, காளிராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.