திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருச்செந்தூா் கோயிலுக்கு நிரந்தர இணை ஆணையா் நியமிக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தா்களின் தேவையை பூா்த்தி செய்யவும், அலுவல் பணிகளை விரைந்து முடிக்கவும் நிரந்தர இணை ஆணையா் இல்லை. தற்போது ராமேசுவரம் கோயில் இணை ஆணையரே கூடுதல் பொறுப்பாக திருச்செந்தூா் கோயிலில் இணை ஆணையராக பதவி வகித்து வருகிறாா். இதனால் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும், அலுவல் கோப்புகளை பாா்வையிடுவதிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நிகழாண்டு ஆனி மாதத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தபட வேண்டும். ஆனால் அதற்கான எந்த பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை.

எனவே, இக்கோயிலுக்கு என நிரந்தர இணை ஆணையா் நியமிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.