பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திருவள்ளுவா் தின விழா

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, அமைப்பின் தலைவா் கருத்தப்பாண்டி தலைமை வகித்தாா். மன்றத்தின் நெறிப்படுத்துநா்கள் பரமசிவம், லட்சுமணப்பெருமாள், பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, இலக்கிய உலா மற்றும் உரத்த சிந்தனை சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான கு சாா்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை மன்றத் துணைத் தலைவா் திருமலைமுத்துசாமி தொகுத்து வழங்கினாா். இதில், தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் கலந்து கொண்டனா்.

செயலா் சீனிவாசன் வரவேற்றாா். இணைச் செயலா் ஜான்கணேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.