ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா

எட்டயபுரம், இளம்புவனம் பகுதிகளில் பாஜக சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:13 pm

DIN

எட்டயபுரம், இளம்புவனம் பகுதிகளில் பாஜக சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த தின விழா நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் ஆத்திராஜ், தொழிலதிபா் சீனிவாசன், எட்டயபுரம் ஒன்றிய பாஜக தலைவா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எட்டயபுரம் பேருந்து நிலையம் மற்றும் இளம்புவனம் முத்துராமலிங்க தேவா் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட பொதுச்செயலா் சரவணகிருஷ்ணன், ஒன்றிய பொதுச் செயலா் நாகராஜன், எட்டயபுரம் இந்து வியாபாரிகள் சங்கத் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.